“சிறிசேனவும்- ரணிலும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்ச்சி நிரலை உருவாக்க முன்வரவில்லை. பாதிக்கப்பட்வர்கள் பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர்.” என உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீளநிகழாமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தென்னாபிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளிற்கான அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்துடனான எனது அனுபவங்கள் குறித்தும் நான் விசேட அறிக்கையாளராக இருந்தவேளை அரசாங்கங்களுடனான எனது அனுபவம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசாங்கங்கள் எப்போதும் ஒற்றை கல்லால் உருவானவையில்லை, சிறந்த எண்ணப்பாங்குகளும் ஆழமான எதிர்ப்புணர்வுகளும் கொண்டவை. முன்னைய அரசாங்கத்துடனான ஈடுபாட்டின் போது நான் அதிகம் எதிர்கொண்ட தடை என்னவென்றால் அவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்சிநிரலைஉருவாக்க தயக்கம் கொண்டிருந்தனர்.
அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. அதற்கு எதிராகவும் செயற்படவில்லை. அதனை அப்படியே நடுவானில் விட்டனர் – ஏனையவர்கள் அதனை தாக்ககூடிய இலக்காக மாற்றினார்கள்.
அவர்கள் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் எதனை செய்ததோ அதனையே முன்னைய அரசாங்கத்தின் பிரதமரும் ஜனாதிபதியும் செய்தனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவை என கருதினார்கள்.
நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்ற முன்வரவில்லை. இலங்கையில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை என்பதை தெரிவிப்பதில் கவலையடைகின்றேன்.
மார்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திரிகள் உலகின் பல பகுதிகளிற்கு சென்று தனது நாடு சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் செய்வதாக நம்பவைக்க –சமாதானப்படுத்த முயல்கின்றனர். என்ற செய்திகளை பார்க்கின்றோம். சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தங்களிடம் உள்ள குறைந்த வளங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்க முடியும் என தெரிவித்திருப்பதை அறிகின்றோம்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இதனை காணமுடியவில்லை என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சிலர் தயாராகயிருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் முழுமையான நிகழ்ச்சிதிட்டமொன்றை கொண்டிருக்கவில்லை,தற்போது அதன் நிகழ்ச்சி நிரலிற்கும் பொறுப்புக்கூறலிற்கும் இடையில் சிறிய தொடர்புமில்லை என தெரிவிக்க விரும்புகின்றேன்.
இலங்கையை சரியான திசையில் நகர்த்தும் விடயத்தில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் மேலும் சிறந்த விதத்தில் செயற்படலாம். இலங்கை நெருக்கடியின் பல்வேறு தருணங்களில் ஐ.நா தலைமையகத்தின் மௌனம் விளங்கப்படுத்த முடியாததாக காணப்பட்டதுடன் எந்த விதத்திலும் பயனுடையதாக காணப்படவில்லை.
அமைப்பு முறை என்பது ஒரு சமூகத்தை மையமாக கொண்டதாக காணப்படும்போது நீதி மற்றும் பாதுகாப்பினை பெறுவது சாத்தியமில்லை என்பதை பெரும்பான்மை சமூகம் விளங்கிக்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர் என முன்னைய ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தது பிழையான விடயம் என்பது நிருபிக்கப்பட்டது. தற்போதும் அந்த கருத்து பிழை. பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கையை தீவிரமாக கருதவேண்டும்.
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.