அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக கொரோனா தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளன.
நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை. உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றுள்ளது. அத்துடன், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.