நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாததாலும், புதிய அட்டையைக் கோர முடியாததாலும், அட்டைகளை இழந்தவர்கள் புதிய அட்டைகளைப் பெற முடியாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கி அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அவ்வகை அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.