இலங்கையில் COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி நாளை (05) முதல் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் COVID காரணமாக உயிரிழப்போரின் உடல்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அண்மையில் சடலங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, COVID தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.