எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும் – ரஷ்ய துணைப்பிரதமரின் எச்சரிக்கையால் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்த ஜேர்மனி !

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Russia to reach pre-crisis oil production level in May 2022 — deputy PM -  Business & Economy - TASS

ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக், இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போது,

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யாவும் அதற்கு பதிலடி கொடுக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.

குறிப்பாக ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.

ரஷ்யாவிடம் இருந்து தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோலிய பொருட்களை வாங்குகிறார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொண்டு இதுபோன்ற தடைகளை விதிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.” என  அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜெர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால், பெட்ரோலிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜெர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜெர்மனி,நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *