தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும் வாகனங்களுக்கு மேலதிகமாக எரிபொருளை சேகரிப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில், நாட்டில் நாளாந்த பெற்றோ லின் தேவை 1,000 மெட்ரிக் தொன்களாலும், டீசலின் தேவை நாளாந்தம் 2500 மெட்ரிக் தொன்களாலும் அதிகரித்துள்ளதாகவும் எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும் மக்களை வலியுறுத்திய அவர், நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.
தமக்குத் தேவையான எரிபொருளை மட்டும் பெற்றுக்கொள்ள முடிந்தால் அனைத்து வரிசைகளும் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.