சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
சீமெந்தின் விலையும் ஏனைய பொருட்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்து வருவதனால், தற்போது நாடு இந்த துறையில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை கட்டிடத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான நுவன் சுமேத தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தில் கிட்டத்தட்ட 15-20 பணியாளர்கள் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது 5க்கும் குறைவான தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் , நாடு முழுவதும் இதேபோன்ற நிலைமையை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் புதிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நியாயமான விலையில் சீமெந்து சந்தைக்கு வெளியிடப்படும் என நினைத்ததாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவரான சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.
மேலும் தற்போது ஒரு மூடை சீமெந்தின் விலையானது ரூ.1900/- ஆக உயர்ந்துள்ளது, தற்போது சந்தை ஒரு மாஃபியா போல செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.