ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை போட்டுத்தாக்கும் விமல்வீரவங்ச !

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர். அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினகரன்: விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்

இன்று இவ்வளவு எதிர்ப்பை வெளியிடும் விமல்வீரவங்ச தான் 2010ம் ஆண்டில் நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே  போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *