ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ள நிலையில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின் தடை ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டு அட்டவணையின்படி, இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை மின் தடைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இன்று மாலை 8.00 மணியுடன் மின்வெட்டு முடிவடைந்து, நியமிக்கப்பட்ட பிரிவுகளில் இரவு 9.30 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.