பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயம் – எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *