உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.
யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில் யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.
இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.
இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.
இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.
‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.
மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.
ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.
அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.
இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.
அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.
மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!
ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?
எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?
இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!
இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.
ashroffali
சகோதரி ஜென்னி
உண்மையில் இலங்கையின் நிலவரம் நீங்கள் நினைப்பதைப் போன்று மோசமான நிலையில் இல்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகள் கட்டவிழ்த்து விடும் பொய்யான பிரச்சாரங்கள் தான் இன்று புலம் பெயர் நாடுகளில் உண்மைத் தகவல்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.அவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களின் மூலமாக உலக மக்களைக் கிளர்ந்தெழ வைத்து அதன் மூலம் தமது அழிவைத் தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும் என்று புலிகள் எதிர்பார்க்கின்றனர்.உலகில் மிக இலகுவான ஆதரவைப் பெற இனச்சுத்திகரிப்பு என்ற வார்த்தை பயன்படுவதால் அதையே அவர்களும் கைக்கொள்கின்றனர்.ஆனால் புலிகளின் செயற்பாடுகள் மூலமாகவே அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.யுத்தப் பிரதேசத்தில் இருந்து தப்பி வரும் பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களே அதற்கான சாட்சியாகும். ஆனால் இவ்வாறான உண்மைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
உண்மையில் இலங்கையில் இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதாக இருந்தால் அது இதுவரை சர்வதேசத்தின் கண்களிலிருந்து தப்பியிருக்க முடியாது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகின் மூலை முடுக்கையெல்லாம் அவதானிக்கக் கூடியதாக வல்லரசு நாடுகள் வானில் ஏவி விட்டுள்ள செயற்கைக் கோள்கள் இந்நாட்களில் இலங்கையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கையில் அப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கண்டுவிட்டு மெளனிகளாக இருந்து விடுவார்கள் என்று நீங்கள் வாதிட வருகின்றீர்களா சகோதரி? இவ்வளவுக்கும் அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிரிட்டன் அரசாங்கம் மட்டுமன்றி ஜேர்மனி என்பன கூட இலங்கை அரசாங்கத்தைவிட தமிழ் மக்களுக்கு சார்பாகவே நிலைப்பாடுகளை வெளிக்காட்டி வருகின்றன. ஆக அவர்கள் எல்லாம் இலங்கையில் நடைபெறுவதாக நீங்கள் இனச்சுத்திகரிப்பை பார்த்துக் கொண்டு வெறுமனே வாளாவிருப்பதாக நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்களா?
சகோதரி…
இலங்கை அரசாங்கம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இலங்கையர் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற தாரக மந்திரம் கொண்ட மஹிந்த சிந்தனை அரசாங்கம். அதன் காரணமாகவே இதுவரை காலமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யுத்தப் பகுதிக்குள் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக மருத்துவ வசதிகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் தென் பிரதேசங்களுக்கு இணையாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதில் கரிசனை காட்டுகின்றது.மூன்று தசாப்த கால போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஒரே இரவில் அபிவிருத்திசெய்து விட முடியாது. அதையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு வேண்டுகோள்… இலங்கையில் தமிழ் மக்கள் அவலங்களை எதிர்கொள்ள பிரதான காரணம் புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்துவதுதான். எனவே அந்த மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் படி நீங்கள் அழுத்தம் கொடுப்பீர்களா? மேலும் இலங்கையில் இருக்கும் நாங்கள் இதுவரை இனச்சுத்திகரிப்புக்கான சாட்சியங்களை காணவில்லை. ஆயினும் புலம் பெயர் தேசத்தில் இருந்து கொண்டு அப்படி நீங்கள் குற்றம் சாட்டுவதாக இருந்தால் அதற்கான ஆதாரங்களை முன் வைப்பீர்களா?
j.jenney
அஸ்ரப்அலி அவர்களே!
“உண்மையில் இலங்கையின் நிலவரம் நீங்கள் நினைப்பதைப் போன்று மோசமான நிலையில் இல்லை”/
உங்களின் இந்த வாசகமே உங்களை யார் என இனம் காட்டுகின்றது. புலிகளின் பாசிசத்தாலும் அதன் வன்முறைச் செயறபாட்டாலும் >இன்றுவரை சர்வதேச மட்டத்தை நோக்கிய அவர்களின் தவறான கணிப்பீடுகளாலும் > நேர்வறையற்ற அரசியல் நிலைப்பாடுகளாலும் > தற்போது நடைபெறும் யுத்த தந்திரோயபாயமற்ற ராணுவ நகர்வுகளாலும் இவர்கள் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருப்பது தெரிந்த விடயமே. ஆனால் ‘ஜனநாயக குடியரசு”; என்று சொல்லிக்கொண்டு இலங்கைப்பெரினவாத அரசு தனது நாட்டிலுள்ள தனது மக்களையே குண்டு மழைபொழிந்து கொன்று குவிக்கும் இனவாதப் படுகொலையை நீங்கள் எப்படி மறுக்கின்றீர்கள்.
நாளாந்தம் நுhற்றுக்கணக்கான உயிர்களையும்> ஆயிரக்கணக்கான அங்கவீனர்களையும்> லட்சக்கணக்கான அகதிகளாக அல்லலுற்று அல்லாடித்திரியும் எம் மக்களையும் >கோடிக்கணக்கு பெறுமதியான சொத்துக்கள் >நிலபுலன்கள் >வாழ்வாதாரங்கள்எல்லாம் அழிக்கப்பட்டு வருவதையும் >2006லிருந்து கணக்கிடமுடியாத சம்புர் தொடங்கி இன்று புதுமாத்தாளன் வரையான சுடுகாட்டுக்கும் யுத்தத்திற்கும் ஒப்பான இழந்த சிதைந்த புமி வளங்களையும் நிலப்பரப்புக்களையும் பற்றி நீங்கள் உணரவில்லையா?
நீங்கள் இலங்கையிலிருப்பதாக சொல்லிக் கொண்டு>’நெற்’றின் முன்னிருந்து நாட்டில் ஜனநாயகமும் நீதியும் நடப்பதாக கணிக்கின்றீர்களா? நாட்டின் நடைபெறும் ஊடகஙகளின் மீதான மோசமான பயங்கரவாத தடை>அவசரகால தடை என்ற விதிமுறைச் சட்டங்களைப் பாவித்து பத்திரிகைச் சுதந்திரத்தை எல்லா இவிதத்திலும் நசுக்கவில்லையா? உண்மைகளை இதுவரை வெளிக்கொணர்ந்த ஒரே காரணத்திற்காக சிங்களவர் தமிழர் என்ற பேதமின்றி எத்தனை ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் சிறைவைக்கப்பட்டும் ஏன் நாட்டை விட்டே ஒடப்பண்ணியும் உள்ளனர்.
எனவே இப்படியான செய்தித்தணிக்கைகள் மோசமான நிலையிலும் நாட்டில் முடிந்தளவு புலியினதும்> இலங்கையரசினதும் வன்முறைகளும் அதையொட்டிய நகர்வுகளும் இவை இரண்டிக்குமிடையில் பலியாகிக்கொண்;டிருக்கும் மொத்த தமிழ் பேசும் மக்கள் அவலங்களும்>யுத்தத்தில் அப்பாவி சிங்கள பொதுமக்களை இந்த அரசு ஆயிரக்கணக்கில் ராணுவ ரீதியாக தமது சுயநலங்களுக்கு இனவெறியை ஊட்டி வளர்ப்பதையும் வெளிகொணர்ந்த வண்ணம் இருப்பதையும் நீங்கள் உணர சாதகம் இல்லையென்றால் ;நீங்கள் நாட்டிலிருந்து கொண்டே நான்கு சுவருக்குள் மட்டும் தான் உள்ளீர்களா?
நாங்கள் புலம் பெயர் தேசத்திலிருந்தாலும் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த மக்களின் விடிவிற்காய்>நிரந்தர சமாதான தீர்வுக்காய் நாமும் எமது ஈடுபாட்டை நியாயமான முறையில் வெளிப்படுத்துகின்றோம் அங்கும் எமக்கு உறவுகள் >பலதரப்பட்ட நட்புக்கள் >சில பொதுவான வேலைத்திட்டங்கள் பரவலான தொடர்புகளை கொண்டிருக்கின்றோம்.அதனால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை வெளிக்கொணர்கின்றோம்
‘நெற்’முன் நிறையவே>ஆனால் ஒரு பக்க சார்பாகவே எழுதும் உங்களைப் போன்றோரின் பேனாவும் > அதன் பணிகளும் எல்லா மனிதர்களின் மனித நேயத்திற்காகவும் உண்மைக்காகவும் நீதிக்காகவும் ஆராய்ந்து எழுத முயற்சித்தால் மட்டுமே நாம் எல்லோரும் சேர்ந்து அங்கு சமாதானத்தையும்> தீர்வையும் உருவாக்க உந்து சக்தியாக இருக்க முடியும்.
நான் எழுதிய இந்த மகளீர் தினத்தை ஒட்டிய ஆக்கம்> யுத்த சூழலில் பெண்கள் பாதிக்கப்படும் அவலங்களையும் விடிந்த கிழக்கிலும்> உதயமாகும் வடக்கிலும் பெண்களுக்கான யுத்த பாதிப்புக்கள்> வன்முறைகளை பற்றி வெளியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதே!
விடிந்த கிழக்கில் இதுவரை 35000 கணவனை இழந்த பெண்கள். இதில் 90 சத வீதமானோர் 35வயதிற்குடபட்டோர். 95 சதவீதமானோர் குறைந்தது இருபிள்ளைகளை கொண்ட தாய்மார்கள். யுத்த சூழல்களாலும் சமூக சீரழிவுகளாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படும் பெண்களின் நிலைப்பாட்டை வெளிக்கொணரும் கணிப்பீட்டின் அடிப்படையில் தான் இவற்றை குறிப்பிட்டேன். இவற்றிற்கெல்லாம் சாட்சியம் கேட்டால் மூட்டைமூட்டையாகத் தான் எழுதி ஆவணப்படுத்த வேண்டும் அதற்கான காலத்திற்கு சிறிது காத்திருங்கள்
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? மக்களின் இழப்புக்களை மட்டும் மனதில் எடுத்தால் உங்கள் எழுத்துத் திறமைக்கு நீங்களும் ஒரு மனித நேயமுள்ளவராக நியாயமான உண்மைகளை கண்டறியலாம். புலம் பெயர் தேசத்திலுள்ள எமக்கே இந்த நியாயபுர்வமான உணர்வு> பிரச்சனைகளை இரு பக்கமும் அலசி ஆராயும் திறன் இருக்குமானால் அங்கிருந்து கொண்டு அதுவும் ‘நெற்’ வசதிக்கு முன்னால் அதிக நேரத்தை எல்லா விவாத எழுத்துக்களிலும் செலவிடும் நீங்கள் சிந்தித்தால் >நாம் எல்லோரும் சேர்ந்து மக்களின் விடிவிற்காய் மட்டும் செயற்படலாம்
ஜெ.ஜென்னி
palli
முதலிலை சிங்களவர் எல்லாம்…………… என ஆராயவும். பின்பு தமிழர் யார் என்பதை நக்கீரனின் பின்னோட்டத்தில் கவனிக்கவும். சங்கரியரே சாய்கின்றபோது அஸ்ராப் இப்படி அடம் பிடிப்பது மனதுக்கு கஸ்ரமாக உள்ளது.
அது சரி நீங்க யார் பக்கம்? தயவு செய்து மக்கள் பக்கமென சொல்லி பல்லியின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம்.
ashroffali
சகோதரி ஜென்னி
//ஜனநாயக குடியரசு”; என்று சொல்லிக்கொண்டு இலங்கைப்பெரினவாத அரசு தனது நாட்டிலுள்ள தனது மக்களையே குண்டு மழைபொழிந்து கொன்று குவிக்கும் இனவாதப் படுகொலையை நீங்கள் எப்படி மறுக்கின்றீர்கள்//
இலங்கை அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக ஒரு போதும் தாக்குதல்களை நடாத்தியதில்லை. ஆனால் புலிகள் தான் பொதுமக்கள் பாதிக்கப்படும்படியான தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த 10ம் திகதி தென்னிலங்கையில் நடைபெற்ற முஸ்லிம் மத வழிபாட்டு நிகழ்வொன்றின் போது புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய விடயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்படியாக எண்ணற்ற தாக்குதல்களை நடாத்தியது புலிகள்தான். மற்றபடி இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாக்கும் தனது பொறுப்பை ஒரு போதும் தட்டிக் கழித்து விடவில்லை. அதே நேரம் புலிகள் பொதுமக்களுக்குள் மறைந்து கொண்டு இராணுவத்தினரை தாக்குதவதைப் பற்றி ஏன் விமர்சனம் செய்யமாட்டீர்களா? இப்படி எத்தனையோ விடயங்களை உதறிவிட்டு மேலோட்டமாக உங்கள் விமர்சனத்தை முன் வைப்பது உங்களை ஒரு ஊடகவியலாளர் என்றோ நடுநிலை வாதி என்றோ அழைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான விடயமல்ல
//2006லிருந்து கணக்கிடமுடியாத சம்புர் தொடங்கி இன்று புதுமாத்தாளன் வரையான சுடுகாட்டுக்கும் யுத்தத்திற்கும்/ /
சம்பூரில் இராணுவம் ஒன்றும் வலியப் போய் தாக்கவில்லையே? மாவிலாற்றுத் தண்ணீரை மூடி இராணுவத்தினரை வலியச் சண்டைக்கு இழுத்தது புலிகள் தானே? அதன் பேர்து புலிகள் தான் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கினார்கள். கந்தளாயின் சிங்களப் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து நடாத்திய தாக்குதலில் பல மாணவிகள் கொல்லப்பட்டனர்.அவர்கள் எல்லாம் மனிதர்களாக உங்களுக்குத் தென்படவில்லையா? மூதூரின் அப்பாவி முஸ்லிம்களை பணயமாக வைத்து இராணுவத்தினரை தாக்கினார்கள். நோயாளிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அம்புலன்ஸை இலக்கு வைத்து தாக்கி நோயாளிகளை கொன்றார்கள். பச்சனூரில் வைத்து அப்பாவி முஸ்லிம் வாலிபர்களை தனியாகப் பிரித்து படுகொலை செய்தார்கள். இதையெல்லாம் பயங்கரவாதம் இல்லையென்று உங்களால் வாதிட முடியுமா? ஆனால் இப்படியான ஏதாவது ஒரு விடயத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இராணுவம் செய்துள்ளதா? அதை பட்டியலிட உங்களால் முடியாவிட்டாலும் எடுத்துக்காட்டாக ஓரிரண்டு சம்பவங்களையாவது குறிப்பிடுங்களேன். பார்க்கலாம்.
//விடிந்த கிழக்கில் இதுவரை 35000 கணவனை இழந்த பெண்கள். இதில் 90 சத வீதமானோர் 35வயதிற்குடபட்டோர்//
இல்லை சகோதரி.. இன்றைக்கு நான் மகளிர் விவகார அமைச்சகத்திலிருந்து எடுத்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் 45 ஆயிரம் பேர் கிழக்கில் விதவைகளாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.அவற்றில் பெரும்பாலான விதவைகள் புலிகளால் வலுக்கட்டாயமாக ஆயுத பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் மனைவிமாராகும். எஞ்சியவர்களில் தொண்ணூற்றி ஐந்து வீதமானவர்கள் அதாவது கிட்டத்தட்ட 25700 பேர் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் விதவை மனைவிமாராகும். ஏனையவர்கள் இயற்கை மரணங்கள் மற்றும் திடீர் அனர்த்தங்கள் என்பவற்றால் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மனைவிமாராகும். இதில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை வெறும் 345 மட்டும்தான். அதுவும் 1990 ஆண்டு தொடக்கம் பதிவாகியுள்ள தரவுகளே இவை .
சகோதாரி ஜென்னி மட்டுமல்ல. பல்லியாக இருக்கட்டும். அல்லது இலங்கையில் இருக்கும் ஒருவராக இருக்கட்டும். எனது தரவுகள் பிழை என்று வாதிட்டால் உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். நானும் அனைத்தையும் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கத் தயார்.
//தயவு செய்து மக்கள் பக்கமென சொல்லி பல்லியின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம்//
யாருடைய சாபமும் என்னை ஒன்றும் செய்யாது பல்லி. நான் எப்படிப்பட்டவன் என்பதை என்னோடு பழகிப் பார்த்தவர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.
Gajan
இதில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை வெறும் 345 மட்டும்தான். அதுவும் 1990 ஆண்டு தொடக்கம் பதிவாகியுள்ள தரவுகளே இவை//
What does வெறும் 345 means Ali. உம்முடைய ஜனநாயக நாட்டில் அந்த நாட்டு ஜனநாயகப்படி 345 தமிழர் காணாமல் போவதும் அல்லது இல்லாமல் போவதும் ஒரு சாதாரணமான விடயமாக நீர் குறிப்பிட்டுள்ளீர். அதுதான் நீர் இதை வெறும் 345 பேர் என்று எழுதியுள்ளீர்
இதேபோல கடந்த பள்ளிவாசல் கொலையை வெறும் 10 முஸ்லிம்கள் தான் செத்தார்கள் என்று யாராவது சொன்னார்களா. உங்களுக்கு தமிழர்கள் என்றால் இப்படித்தான் எழுதுவது என்று அரசின்- அஸ்ரப் அலியின்- தலையிலேயே வந்துவிட்டது – இதை Begining of the Genocide idology என்று சொல்லலாமா.
danu
நேற்று (மார். 10) மாலை வெள்ளவத்தையில் தமிழ் ஆசிரியை வெள்ளைவானில் கடத்தல்
http://thesamnet.co.uk/?p=8533
j.jenney
ஆட்கடத்தல்கள் பற்றி நூலொன்றை எழுத முனைந்த பேராசிரியர் கடத்தப்பட்டார் :
முன்னாள் ரூபவாஹினித் தலைவர் பேராசிரியர் தம்மிக கணநாத் திசநாயக்கா அவருடைய கொட்டாவ வீட்டிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கடவத்தைக் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று இரவு ஏழரை மணியளவில் வீட்டு வேலைக்காரரைக் கட்டி வைத்துவிட்டு அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் தினமின பத்திரிகையில் விஜயானி எதிரிசிங்கவினால் எழுதப்பட்ட செய்திக் குறிப்பொன்றில் பேராசிரியர் தம்மிக கணநாத் திசநாயக்கா ஆட்கடத்தல்கள் பற்றிய நூலொன்றை எழுதவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேராசிரியர் கணநாத் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததுமல்லாமல் அவருடைய ஊடக ஆலோசகராகவும் செயற்பட்டவர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க காவற்துறையினருடன் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்த போதும்; பேராசிரியர் தம்மிக கணநாத் திசநாயக்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறியவரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
updated – 2009-03-11மூலம் – office Reporter
palli
// நான் எப்படிப்பட்டவன் என்பதை என்னோடு பழகிப் பார்த்தவர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.//
கண்டிப்பாக; தோழர், கருனா, பிள்ளையான், சங்கரி; அவர்; இவர் , மகிந்தா, விரு மாண்டி ,இப்படியானவர்களுடன் தானே தங்கள் பழக்கம். ஒரு மனிதனின் மன நிலையறிய அவனது ஒரு பின்னோட்டமே அதிகம். இதில் தாங்கள் பல பின்னோட்டம் விட்டவர். அதனால் தங்களையும் தங்கள் பிரதான கடமையையும் பல்லி மிக நிதானமாக புரியும்.
உதாரணத்துக்கு உமது வித்தை ஒன்றை பாரும்.
// 35000 கணவனை இழந்த பெண்கள்// இது ஜென்னியின் வாக்கு மூலம்.
//வெறும் 345 மட்டும்தான்// இது அஸ்ரப்பின் நோக்கு மூலம்.
இதில் அஸ்ராப் இரு பூச்சியத்தைதான் அகற்றி உள்ளார். எதோ அவரால் முடிந்தது. எல்லாமே தெரிந்த உமக்கு அரசு செய்யும் தவறு மட்டும் கண்ணுக்கு தெரிவதில்லை ஏன்?. அல்லது அது உமது கட்டுபாட்டில் இல்லையா?? சில வேளை உமக்கு ஏதாவது தெரிய வேண்டுமாயின் தேசத்துடன் (பின்னோட்டத்தில்தான்) தொடர்பு கொண்டால் யாராவது ஒருவருக்கு அது தெரிந்திருக்கும். அதை விட்டு கொழும்பு இலங்கையின் தலைநகரம் என்பது போன்ற வேடிக்கை பட்டாசுகள் எமக்கு தேவையில்லை. இது பல்லியின் ஆரம்ப சாபம் தொடரும் பல்லியின் சாபம்.
kaanavillai
//இலங்கை அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக ஒரு போதும் தாக்குதல்களை நடாத்தியதில்லை.// அஸ்ரப்
இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய “ஜோக்”
ashroffali
அப்பப்பா…. நான் எரிந்து சாம்பராகி விட்டேனா உயிருடன் தான் இருக்கிறேனோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கின்றது. அந்தளவுக்கு நெருப்புக் கணைகள் என்னை நோக்கி கக்கப்பட்டுள்ளன.
சகோதரி ஜென்னி 35000 பேர் என்று கூறியதை நான் ஆதாரத்தின் அடிப்படையில் 45000 பேர் என்று பதிவு செய்திருப்பதை பல்லி பார்க்கவில்லை போலும்…………………………………….
காணாமல் போனவர்களை வெறும் 345 பேர் என்று நான் குறிப்பிட்டதன் காரணம் மற்றவர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் மனிதர்கள் காணாமல் போவதாகச் சொன்னதை மறுக்கத் தானே தவிர உயிர்களின் பெறுமதியை கொச்சைப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ அல்ல.சிங்களவராக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் அல்லது முஸ்லிமாக இருந்தாலும் அனைவரும் ஒரு மனிதனின் வழித்தோன்றல்களாக வந்து பரம்பல் அடைந்தவர்கள் என்ற வகையில் என் சகோதரர்களே தான்.அந்த வகையில் ஒரு மனிதார் காணாமற் போவதான செய்தி வரும் போது எனக்குள்ளும் ஒரு கவலை வரத்தான் செய்கின்றது. குறிப்பாக என்னதான் பயங்கரவாத இயக்கமொன்றின் முக்கிய புள்ளியாகவும் இறக்கும் தறுவாயில் பூநகரி பிரதேசத்தின் கட்டளையிடும் தளபதியாகவும் இருந்த போதும் தமிழ்ச்செல்வனின் மறைவின் போதும் நான் அனுதாபத்தை வெளிப்படுத்தியவன். இன்றைக்கு நான் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாக கூக்குரல் இடுகின்றவர்கள் எல்லாம் ஆரம்ப காலம் தொட்டு என் பதிவுகளை வாசித்து வந்திருந்தால் எனக்குள் இருக்கும் மனிதாபிமான உணர்வுகளை கொஞ்சமேனும் புரிந்திருப்பார்கள். ஆனாலும் எவர் என்னதான் கூக்குரல் இட்டாலும் நான் என் கருத்தை முன் வைக்கத் தான் செய்வேன். அது சிலவேளைகளில் அரசாங்கத்துக்கு எதிரானதாகவும் இருக்கலாம். புலிகளுக்கு எதிரானதாகவும் இருக்கலாம். என் மனதுக்குப் பட்டதைத் தான் நான் பதிவு செய்வேன். மற்றவர்களின் விமர்சனத்துக்குப் பயந்து ஓடியொளியும் அளவுக்கு நான் கோழையல்ல.
நான் குறிப்பிட்ட காணாமற் போனோர் பற்றிய எண்ணிக்கையில் கணிசமான முஸ்லிம்களும் அடக்கம். ஆக நான் தமிழர்கள் என்பதற்காக அப்படி குறிப்பிட்டதாக நினைத்து ஆக்ரோசமான பதிவுகளை இட்டவர்கள் குறித்து நான் கவலைப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. கொழும்பில் இப்போதும் கூட சந்தேகத்தின் பேரில் தமிழர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கான உதவிகளைச் செய்து கொடுப்பதிலும் உரியவர்களை அணுகி அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும் என் பங்கு கணிசமான அளவில் இருப்பதை என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் அறிந்திருப்பார்கள். இதை நான் விளம்பரத்துக்காக குறிப்பிடவில்லை. நானும் மொழியால் ஒரு தமிழன் என்று மனதார நினைத்துக கொண்டிருப்பதன் காரணமாகவே என் இனம் தொடர்பான கரிசனை கொண்டவன் என்பதைச் சுட்டிக்காட்டவே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
//தோழர் கருனா பிள்ளையான் சங்கரி; அவர்; இவர் மகிந்தா விரு மாண்டி இப்படியானவர்களுடன் தானே தங்கள் பழக்கம்//
அவர்களுடன் எல்லாம் உங்களாலும் பழக முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கின்றதா பல்லியாரே? ……………………………………………………………………………
இலங்கையில் இன்று நடக்கும் ஏராளமான அவலங்களுக்கு காரணம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தான். அரசியல் அதிகாரத்துக்கா எந்த வகையான கீழ்த்தரமான வேலையிலும் ஈடுபடக் கூடியவர்கள். அந்த வகையில் மேல் மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு துரும்பாக பயன்படுத்த பேராசிரியர் கங்கானாத் திசாநாயகவை ஒளித்து வைத்து விட்டு கடத்தல் நாடகம் ஆடுகின்றார்களோ யாருக்குத் தெரியும்? அரசியல் சித்து விளையாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அனுபவம் அத்துப்படியல்லவா?
santhanam
விரு மாண்டி இந்த வசனத்தை ஒரே ஒருவர்தான் உபயோகிப்பார் அவரும் உயிருடன் இல்லை பல்லி.
ashroffali
சகோதரி ஜென்னி
பேராசிரியர் இன்று காலை வீடு திரும்பி விட்டாராம். ஆக ஒரு கடத்தல் நாடகம் முற்றுப் பெற்றுள்ளது.
palli
// பழக முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கின்றதா பல்லியாரே? //
இவர்களை எல்லாம் மனிதரெனவும் ஜனநாயக யோகிகளெனவும் பழகியதை இட்டு வெக்கப்படுகிறேன்.
//பல்லி பார்க்கவில்லை போலும்……………………………………. //
பல்லி சரியாகதான் பார்த்துள்ளது.ஜென்னியின் கவலை 35000. அஸ்ராப்பின் கவலை 345. இதைதான் சுட்டிகாட்டினேன். இது கூட புரியாமல் என்னதான் அரசியலோ. இனி பல்லியும் சங்கரியர் மாதிரி. அன்புள்ளவில் தொடங்கி நன்றியில் முடிக்க வேண்டும் போல் உள்ளது