ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி செய்த செயல்களால் உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன். இந்த நாட்டு மக்களும், உங்களுக்கு வாக்களித்த மக்களும், எமக்கு வாக்களித்த மக்களும் காப்பாற்றப்பட்டனர். 200,000 பேர் இறப்பார்கள் என்றீர்கள். ஒக்ஸிஜன் இல்லை என்றீர்கள். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது.
எண்ணெய் கொண்டு வர டாலர்கள் இல்லை. ஆனால் தார் கொண்டு வரப்படுவதாக கூறினீர்கள். ஆனால் அரசு தார் கொண்டு வருவதில்லை. தனியார் மூலம் தார் கொண்டுவரப்படுகிறது. கொரோனா தொற்று நிலைமையிலும் இந்த நாட்டில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது
கொவிட் பிரச்சினை இல்லாத நிலையிலும் மக்களுக்கு வரிசையில் இருக்க நேரிட்டது. கப்பல் வரும்வரை காலிமுகத்திடலில் காத்திருக்க நேர்ந்தது, உங்கள் தரப்பு 1.5 மில்லியன் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
உங்கள் கட்சிக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் நிரம்பியுள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாங்களும் இருக்கிறோம்.
அதனால் பைசர் தடுப்பூசி ஏற்றி ஜனாதிபதி கோத்தபாய அவரை பாதுகாத்தார். அவர் இருக்க வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் எண்ணெய் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். வாயு பிரச்சினைகளை தீர்ப்போம்.
இவை தற்காலிகமான பிரச்சினைகள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சவாலை நாம் நிச்சயமாக வெற்றிகொள்வோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.