இலங்கையின் வான்வெளி முழுவதையும் ஒரு பில்லியன் டொலரிற்கு அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்காக நாட்டிற்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோகஅபயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான சமீபத்தைய விஜயத்தின்போது இலங்கையின் வான்வெளி முழுவதையும் இந்தியாவிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் இந்தியா செல்வதற்கு முன்னர் அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.