நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக் காலத்தின் பின்னர் நீங்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அந்தக் காலம் முடிவடையும் போது நாட்டில் எண்ணெய் வரிசைகள் முடிவுக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குள் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தேவையான மசகு எண்ணெய் கிடைத்து விடும் என்று கூறிய அவர், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பிரச்சினை இருக்காது என்றும் கூறினார்.
எனினும், நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசர்கள் திரும்பி வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் தெரிவித்திருந்தார்.