ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை பொது மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். அந்த ஆலயத்திற்கு கோட்டாபய செல்லவுள்ளார் என்ற தகவல் அறிந்தே சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான ஐக்கிய பெண்கள் சக்தியினர் ஞனாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சிறிலங்கா அரச தலைவரின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவைப் பாதுகாப்பதற்காக அனுராதபுரம் ஆலயத்திற்கு அருகில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஞானாக்காவின் பராமரிப்பில் இருக்கும் காளி ஆலயத்தில் ஆன்மீக அமைதி தேடி கோட்டபாய அடிக்கடி அங்கு சென்று வருவது வழமை. இந்நிலையிலேயே கோட்டாபய ஆலயத்திற்கு வரவுள்ளார் என்ற தகவலின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சம்பவ இடத்திற்கு ஏராளமான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அனுராதபுரத்தில் பல எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.