“மக்களின் போராட்டங்களை அரசாங்கம் இன- மத விடயங்களால் திசைமாற்ற முயல்கின்றது.” என ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளார். ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களை குறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என அவர்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கின்றது. நியாயப்படுத்தக்கூடிய நோக்கங்களிற்காக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் இயல்பை மாற்றுவதற்காக அரசாங்கம் அரசியல் மத காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது. எனினும் தங்கள் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தனிநபர்கள் அரசாங்கத்திற்கு கிடைக்காததால் அரசாங்கத்தின் நோக்கம் தோல்வியடைந்துள்ளது. அரசாங்கம் பொதுமக்களை அச்சுறுத்த முயல்கின்றது. சமீபத்தில் பிரதமரின் உரை மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டது. ஆர்ப்பாட்ட நேரம் முடிவடைந்ததும் மக்கள் போய்விடுவார்கள் போராட்டம் இயல்பான மரணத்தை தழுவும் என அரசாஙகம் எதிர்பார்த்திருந்தது. அரசாங்கம் பொதுமக்களின் போராட்டங்களை அலட்சியம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். Show More Previous Post “எங்கள் கட்சியில் யாரும் விற்பனைக்கு இல்லை.”- பசில் ராஜபக்ஷவுக்கு சஜித் ட்வீட் ! Next Post இலங்கையின் டொலர் நெருக்கடிக்கு காரணம் என்ன..?