ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவு வழங்குவதற்காக பிரதமர் குழுக்களை நியமித்துள்ளார்.
கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க ருவான் விஜயவர்த்தன பொலிஸ் இராணுவத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ள பிரதமர் கோட்டா கோ கம பகுதிக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயார் என தெரிவித்துள்ள பிரதமர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எவையும் இடம்பெறாது என உறுதியளித்துள்ளார்.
அவசியமான திட்டங்களை உருவாக்குவதற்கு இரண்டு மூன்று மாதங்க்ள தேவை என தெரிவித்துள்ள பிரதமர் குறுகிய இடைக்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் எதிர்காலம் சிறந்ததாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் சர்வதேச நாணயநிதியத்துடன் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சவாலானவையாக காணப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார எரிபொருள் உரவிவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் போதிய திட்டமிடல் இன்மையயே தட்டுப்பாடுகளிற்கு காரணம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.