மகாவம்ச சிந்தனையில் ஊறித்திளைத்ததே சிங்கள இனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் நீதியை வழங்கியிருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் இருந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மகாவம்ச சிந்தனையில் ஊறித் திளைத்து இருப்பதனாலேயே ராஜபக்ஷ குடும்பமும் சிங்கள மக்களும் இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே நாடு சீரழிகின்றது என்றும் இவர்கள் உண்மையை உணர்ந்து சரியான வழியில் நடந்துகொண்டால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.