பல்கலைகழக மாணவர்களிடையே பகிடிவதை தொடர்பான விடயங்களை கட்டுப்படுத்த பல்கலைகழகங்கள் ஆணைக்குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் கூட அரச பல்கலைகழகங்களில் பகிடிவதை தொடர்கதையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 35 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.