ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியின் மேம்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் இணைக் குழு ஒன்றை வடக்கு கிழக்குக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்பித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி இத்துறை சார்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்தச் செயலணியின் இணைக்குழு அமைக்கப்படுவதன் மூலம் அப்பிரதேச மக்கள் மத்தியில் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.வடக்கு கிழக்கில் இந்தத்துறையில் பயிற்சி பெறுகின்றவர்களின் அபிவிருத்திக்கென கல்வி அமைச்சு விசேட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.