மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (13.03.2009) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது எனத் தெரிவித்துள்ள செயலகம் இதன்போது தேர்தல் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தேர்தல்கள் நடைபெறவுள்ள விதம் தொடர்பாக பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது.