.தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
……………………………………………………………………………………………
ராஜபக்சக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நேரம் வரை ஜனாதிபதியின் அதியுச்ச அதிகாரங்களை உள்ளடக்கி இருந்த 20ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றில் மைத்திரிபால சிறிசேனவுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு அளிக்கும் முகமாகவு செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 20 திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நாளில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. உண்மையிலேயே குறித்த திருத்தத்தை எதிர்ப்பவராக இருந்திருப்பின் மைத்திரிபால சிறிசேன அன்றைய அமர்வில்கலந்து கொண்டு எதிர்த்திருக்க வேண்டும்.
இன்று ஆட்சி மாற மைத்திரி தரப்பினுடைய காட்சிகளும் மாறுகின்றது. மக்கள் சரியான அரசியல் தலைவர்களை அடையாளம் காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.