ஈரப்பலாக்காய் மரமொன்றிலிருந்து ஈரப்பலாக்காய்கள் இரண்டை பறித்து, அவ்விரு காய்களையும் விற்று கிடைத்த 100 ரூபாவில், அரை கிலோகிராம் அரிசியைக் கொள்வனவுச் செய்து வீட்டில் பட்டினியுடன் இருந்த குழந்தைகளுக்கு பசியைப் போக்கிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரப்பலாக்காய் மரத்துக்குச் சொந்தக்காரரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிகேபொல பொலிஸில், முறைப்பாடு செய்துள்ள அப்பெண், தன் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர், தனது உறவினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய சிறிய பிள்கைளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை. இந்நிலையில், தன்னுடைய உறவுக்காரருக்குச் சொந்தமான ஈரப்பலாக்காய் மரத்திலிருந்து இரண்டு காய்களை பறித்து, அதனை விற்று, அரை கிலோகிராம் அரிசியை கொள்வனவுச் செய்து, சமைத்துக்கொடுத்தேன் என்றும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.