எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
………………………………………………………….
பால்மா நுகர்வின் போது வெளிநாட்டு பால்மா நிறுவனங்களுக்கு நம்மவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. மேலும் உள்நாட்டில் தேவையான அளவுக்கு பசுமாடுகள் உள்ளதால் பால் நுகர்வுக்கு அந்தளவு சிரமம் ஏற்படுவதில்லை. முக்கியமாக லீட்டர் பால் 130-150 வரையான விலையிலேயே கிடைக்கிறது. இதை நுகர நமது மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அங்கர் பெட்டிகளுக்காக மட்டுமே கூட்டம் அலைமோதுகிறது. உள்நாட்டு மாப்பொருட்களை நுகர்வதில் கூட நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுவது கிடையாது. நமது இந்த மனோநிலையை தான் இறக்குமதி நிறுவனங்கள் தங்களுக்க சார்பானதாக மாற்றிக்கொள்கின்றன.
இதற்கு சிறப்பான உதாரணம் அண்மையில் இடம்பெற்ற சீமெந்து விலையேற்றமும் பின்னரான விலைக்குறைவும். சீமெந்தின் விலையேற்றப்பட்ட போது அதிகமாக விலைகொடுத்து சரி சீமெந்து மூடைகளை பதுக்குவதில் கவனம் காட்டினர். இதனால் விலையும் எகிறியது. குறுகிய கால இடைவெளியில் சீமெந்து கொள்வனவை பரலும் நிறுத்தியதால் ஏற்றப்பட்ட விலைகளை குறைத்து மீண்டும் விற்பனையாளர்கள் விற்றனர்.
நமது அங்கலாய்ப்பை வியாபாரமாக்கவே இந்த விற்பனையாளர்கள் எப்போதும் முனைவதால் நாம் சுதாகரித்துக்கொண்டாலே இந்த விலையேற்றம் தொடரை்பான கனிசமான விளைவுகளை கட்டுப்படுத்த முடியும்.