எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்க வேண்டாம் எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இன்று (06) வழங்கப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இந்த சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது