நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை; ஈழம் கட்டவே விரும்புகிறோம்: கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி

kasi-anandhan.jpgகாசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான  பேட்டி வருமாறு:- 

‘பத்துத் தடவை பாடை வராது .பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!  செத்து மடிவது ஒருமுறைதானடா,  சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று

கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. ‘இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்’ என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘விரும்பத்தகாத விளைவு’ காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?’ என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, ‘எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?’ என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி:  போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே’ என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • Suresh M.M.A
    Suresh M.M.A

    ஓடி வாங்கோ! ஓடிவாங்கோ…!!
    நம்ம மீன்பாடும் தேன்நாடு தந்த பாட்டுக் கொத்தனார் வந்து விட்டார் சபைக்கு. ஆளுக்கொவ்வொரு சிறங்கை சீமென்ட்டு குடுங்கோ ஏதோ கட்டப் போறாராம்.

    நிலத்தடி மாளிகை கட்டி முடிஞ்சுது கோவிந்தா!
    நீச்சல் தடாகம் கட்டி முடிஞ்சுது ஏழுகுண்டலவாடா!
    வித்துடல் உறங்கணை கட்டி முடிஞ்சுது நாராயணா!
    பொங்குதமிழ் வளைவு கட்டி பொங்கி முடிஞ்சுது கணேசா!
    வணங்காமண் ஓட்டி முடிஞ்சுது வெங்கடாசலா…
    இனி ஈழம் கட்டப் போறாராம் நம்ம கொத்தனார் கொப்பியடிச்சான் புலவர்.

    வாங்கோ.. வாங்கோ.. பறந்தோடி வாங்கோ!
    பணப்பையைத் திறந்தோடி வாங்கோ.

    கொஞ்சம் பொறுங்கோ அண்ணா பக்கத்தில செத்தவீடொண்று. ஓடிப்போய் முகத்தக் காட்டடிற்று ஓடிவாறன். உங்கட புண்ணியத்தால இங்க ஒவ்வொரு நாளும் செத்தவீட்டுக்கு முகம் காட்ட ஓடித் திரிய வேண்டிக் கிடக்கு.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    //ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்?//

    மக்களைப் பாதுகாக்கத் தந்த ஆயுதங்களால் நீங்கள் எப்படியான லட்சணத்தில் பாதுகாத்தீர்கள் என்பதுதான் உலகறிந்த சத்தியமாச்சே?!
    நீங்கள் கட்டப்போற தமிழீழத்தக்குஅஸ்திவாரத்தை வெட்டிப்பாருங்கள் தெரியும் அப்போ. வெட்ட வெட்ட எழுந்துவரும் நீங்கள் சுட்டப்போட்டு வெட்டிப்புதைத்த தழிச்சாதியின் மண்டையோடுகள். ………………….

    //விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.//
    “புள்ளிவிபரங்கள் வெளியே காட்டும் விடையங்கள் சுவாரஷ்யமாக இருக்கலாம். ஆனால் அவை மறைப்பவை மிகவும் முக்கியமான விடையங்கள்.” என்று அண்மையில் தாயகத்தில் ஆனந்தவிகடன் கருத்துக் கணிப்பைப் பற்றிப் படித்த ஞாபகம்.

    இந்த ஆனந்தவிகடன் கருத்தக்கணிப்பை இங்கு தமிழ்நாட்டில் எள்ளி நகையாடாதோர் இல்லை. காசி அண்ணாக்கும் இது தெரியும்தானே?! “பேட்டி கொடுங்கொ சார்” எண்டு சும்மா வந்தாப்போல எதை வேணுமெண்டாலும் சொல்லலாமோ? .

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    மருந்துகளை ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை இலங்கை ராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது : ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை பாலாஜி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : இலங்கை ராணுவம் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து பெண்களின் கற்பை சூறையாடி, கொலை செய்தும் இளைஞர்களை கொடூரமாக சுட்டு வீழ்த்தியும் வருகிறது. இதற்கு முழுக்க இந்திய அரசு துணை நிற்கிறது. உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி வருகிறது. ஆனால் இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இன்று வரை வலியுறுத்தவில்லை.

    ஏன் என்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் செய்வது இந்திய அரசுதான். தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துகளை ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை. இலங்கை ராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது.

    இதுவரை நடந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பற்றி நாங்கள் பேசியது இல்லை. ஆனால் இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசுவோம். கருணாநிதி கடந்த 3 வருடங்களாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை பிரிக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார். இதன் பலனாக நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு, கண்ணப்பன் கட்சி மாற்றம் நடைபெற்றது.

    கண்ணப்பன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அ.தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.வை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு வைகோ கூறினார்.

    Reply
  • nagan
    nagan

    ஆமா நீங்கள் இதுவும் சொல்லுவியள் இன்னமும் சொல்லுவியள் உங்கட குடும்பம் குட்டியோட இந்தியாவில் சொத்து சுகத்தோட இருந்துகொண்டு உங்களுக்கு எதுதான் வராது உங்கட பிள்ளைகள் எந்தக் களத்தில் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு சொல்லுங்கள் முதலில். இந்தியாவில் இருந்து கொண்டு என்ன வீரவசனம் வேண்டிக் கிடக்கு. போங்கள் வன்னிக்கு (புதுக்குடியிருப்பு)அங்கு உன் வீரத்தைக் காட்டுங்கள். இந்தியாவில் இருந்துகொண்டு உங்கள் வீரவசனம் எல்லாம் எடுபடாது அண்ணே

    நீங்கள் பட்டுவேட்டி கட்டிய கனாவில் இருந்தவர்கள் அதனால்தான் எல்லாம் களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி
    ………….. குயவனை வேண்டி
    ……………. தோண்டி
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி கதைதான்

    Reply
  • Tamil
    Tamil

    உணர்ச்சிக் கவிஞன் காசி அண்ணா அவர்களே 77 தேர்தல் மேடைகளில் (ஆஹா… என்னே கண்கொள்ளா காட்சிகள் அவை!) எங்கள் ஊர் இளைஞர்/யுவதிகள் உங்கள் மேல் வைத்த இரத்தப் பொட்டுகள் கழுவாமல் இன்னும் வாடை வீசுகிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    காசியண்னா! பட்டென உண்மையை போட்டு உடைக்கவேண்டியது தானே!! நாங்கள் ஈழம் கட்டவோ பாலம் கட்டவோ விரும்பவில்லை நவீனமயப்படுத்தப்பட்ட “மயாணம்” கட்டவே விரும்பகிறோம். இதற்கும் தீர்கதரிசனம்மிக்க எமது தேசியத்தலைவர் ஈழத்தமிழரை நம்பி போராட்டம் தொடங்கவில்லை. இருக்கவே இருக்கிறார்கள் புலம்பெயர் “விசுக்கோத்துக்கள்”.

    Reply
  • george
    george

    people can say whatever they like to say but mr kasiananthan is great poet and had suffered by the civil servants in 80s his family killed and his own sister was raped. His life stil in danger he dont have luxury life what people are think of, Its about respect we all have to learn, we live in the country like england which teach you a manners and how to speak, please watch news night. thank you very much

    Reply
  • accu
    accu

    ஜோர்ஜ், காசி ஆனந்தன் ஒரு நல்ல கவிஞர் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.ஆனால் அவரின் கற்பனைகளை தனது கவிதைகளில் காட்டுவதோடு நிறுத்தவேண்டும். ஈழம் என்ற கற்பனைக் கோபுரம் இடிந்து தரைமட்டமாக அந்த இடிபாட்டில் எம் மக்கள் எல்லாம் உயிரை விட்டுக்கொண்டு இருக்கும் இந்த அவலநிலையில் ஈழம் கட்டுகிறேன் பாலம் கட்டுகிறேன் என அடுக்குமொழிகள் அவசியமா?

    ஜோர்ஜ் மரியாதையும் பேச்சுக் கண்ணியமும் புகட்ட வேண்டியது தேசத்தில் பின்னூட்டம் விடுபவர்க்கல்ல. இப்படியே வெளிக்கிட்டு வெளியே போனீர் என்றால் எங்காவது ஒரு சந்தியில் கவனயீர்ப்பு என்ற பெயரில் ஒரு கூத்து நடந்துகொண்டிருக்கும் அங்கு சென்று புலிகள் வன்னியில் மக்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத்திருந்தால் அது பிழைபோல் தெரிகிறது என மெல்லச் சொல்லிப்பாரும். அதன்பின் வந்து எழுதும் மரியாதையும் கண்ணியமும் எங்கே புகட்ட வேண்டுமென்று. நன்றி.

    Reply
  • thurai
    thurai

    இலங்கைத் தமிழர்களிற்கும், தமிழீழம் என்ற போதைக்கும் சம்பந்தமில்லாம்ல் போய்க்கொண்டிருக்கின்றது.

    புலத்தில் வாழும் 10 லட்சம் அகதிகளிடம் மட்டும் தமிழீழப்போதையை விலைப்படுத்தக்கூடியதாக இருக்கின்ற்து.

    இதனை மையமாக் வைத்து கவிதை ஒன்று வரைந்தால் தற்போதய சூழலில் பொருத்தமாகவிருக்கும்.

    துரை

    Reply
  • Kullan
    Kullan

    காசியண்ணை நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? உங்கடை மகளை இலண்டனிலை படிக்கவிட்டு விட்டு குடும்பத்தோடை இந்தியாவிலை இருந்து குசியாகக் கதையுங்கோ. எங்களுடைய இனசனம் தானே அங்கை சாகிறார்கள். உங்களுக்கு இழப்புகள் இல்லைத்தானே. நீங்கள் என்னவும் சொல்லுவியள். நீங்கள் பாலமும் கட்டவேண்டாம் ஈழமும் கட்ட வேண்டாம். எங்களை மட்டும் விட்டுவிடுங்கோ. உங்கடை தலையிட்டைச் சொல்லுங்கோ. உங்களை நம்பி ஆண்டபரம்பரை ஆண்டபரம்பரை என்று இப்போ தாண்டபரம்பரையாகி சிங்களவானால் …… பரம்பரையானோம் மக்காள். எங்களை விட்டுவிட்டு ஆளுங்கோ.

    Reply
  • Kullan
    Kullan

    பழையதைத் திருப்பித்துருப்பி சொன்னதையே சொல்லுங்கோ. புதிதாகச் சிந்திக்கத் தெரியாதா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புதிதாக சிந்தித்தால் விடை இப்படித்தான் கிடைக்கிறது. தமிழ்ஈழம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பசொத்து அதுமட்டுமல்லாமல் அதில் வாழும் உயிர்யினங்களும் அந்த குடும்பத்தின் சொத்தாகவே கணிக்கப்படும் என சாசனம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது…. இதை விட வேறுவிடை கிடைக்கவில்லை.

    Reply
  • palli
    palli

    தனி குடிதன முறையை அமூல்படுத்தியதே இந்த காசி ஆனந்தன் தான்.
    அன்று காசி & இராசதுரை.
    இன்று கருனா & பிள்ளையான்.
    வடக்கேயும்தான்.

    Reply
  • sivajeyam
    sivajeyam

    காசியானந்தன் உங்களிலும் பார்க்க எவ்வளவோ மேல், அவர் தனது சகோதரன் ஜெயத்தை போராடத்தில் இழந்துள்ளார். குடும்பத்தில் சகோதரர்களை சிங்க்ள வெறியர்களால் இழந்துள்ளார். சரியோ பிழையோ கூட்டணி காலத்தில் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்தவர். இப்பவும் காசி இந்தியாவை விட்டு போக உங்க இந்திய அரசாங்கம் அனுமதிக்கவில்லையே வெளியே போக, இதைவிட்டு ஒரு கிழக்கின் போராளியை யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளே காசியானந்தன் எதுவும் செய்யவில்லையென சொகுசுவாழ்வு வாழ்வதாக பீற்றவேண்டாம். அமிர்தலிங்கம் மாதிரி முக்காவாசி லோயர் வேலையும், கால்வாசி அரசியலும் செய்து தமிழரை ஏமாற்றி பிழைக்கவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த கிழக்கின் தமிழ் தேசியவாதி.

    Reply
  • thurai
    thurai

    புலத்தில் வாழும், பதவிமோகமும், பண மோகமும், கொண்ட தமிழர்களின் ஓலம் தான் தமிழீழமென்பது. பிறந்தநாட்டில் துனபத்தில் வாடும் மக்களிற்கே தமிழ்மண் சொந்தமானது.

    அந்த ஏழைகளின் அழிவில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் புலிகளிற்கும், இந்த் அவலங்களை உலகிற்குக்காட்டி புலிகளிற்கு ஆதரவு தேடி, பணமும் தேடி உல்லாச வாழ்வினை அனுபவிக்கும் தமிழ் மொழியினை விற்றுப்பிழைப்பவர்களிற்கு மட்டுமே உமது வார்த்தைகள்
    இனிப்பாகவிருக்கும்.

    துர

    Reply
  • படுவாங்கரையான்
    படுவாங்கரையான்

    நண்பர் சிவஜீவம் அவர்களே. மேல கருத்தாடல் தந்த ஆரும் யாழ்ப்பாணியம்+ மட்பாணியம் என்ற கீழ்ப்பாணிய சொற்பிரயோகம் தந்தமாதிரி எனக்குப்படல. ஆனா அண்ணன் காசி ஆனந்தன்(காத்தமுத்து சிவானந்தன்) 1977 மாசி மாதம் என்டு நெனைக்கிறன் கல்லடிப் பாலத்து இறக்கத்துல அவருக்கு “சிறைமீண்ட செம்மல்” என்டு ஒரு பெரிய வரவேற்புக் கூட்டம் நடந்தது அதுல அவர் சொல்லின் செல்வர் இராசதுரையைப் பாத்து (பின்நாளில் அவர் பல பட்டக்காரர் அது நமக்கு இப்போ வேண்டாம்)நீங்கள் செய்தது போதும் சாய்மனைக் கட்டிலில் படுத்திருங்கள் நாங்க உங்களுக்கு பாலும் பழமும் தாறம் எண்டு பேசினத ஒருமுறை அவருக்கே ஞாபகப்படுத்தின மாதிரிதான் எனக்குப்படுது. இல்ல அப்புடி இல்ல எண்டு அடம்புடிச்சியல் எண்டா பொறகுவாறன்.

    படுவாங்கரையான்.

    Reply
  • Kusumpan
    Kusumpan

    சிவஜெயம்…………… யார் வடக்குக்கிழக்கு எண்டு கதைத்தது. அண்ணன் போராடுவதே உங்களுக்கும் சேர்த்துத்தானே. பிள்ளையான் கருணா இவ்வளவு கீழ்தரமாக நடந்தும் அண்ணை கிழக்கு மண்ணை மறக்கேல்லை. இப்பபதுங்கி இருக்கிறோம் பாய்போம். எங்கள் அண்ணையின் இதயக் கவிஞர்தான் காசியண்ணை.

    Reply