யாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களான சின்ன வெங்காயம் இறால். பீட்றூட் கிழங்கு உட்பட மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு 23 லொறிகள் இன்று அதிகாலை 1.30 மணிக்கு வெலிசற களஞ்சியசாலையை வந்தடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்திற்குக் கடந்த செவ்வாய்கிழமை ஏ 9 வீதியினூடாக லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்த லொறிகளில் ஏற்றப்பட்டன.
இன்று அதிகாலை வெலிசற களஞ்சியசாலைக்கு வந்துசேர்ந்த 23 லொறிகளில் 48 ஆயிரம் கிலோகிறேம் சின்ன வெங்காயம், 36 ஆயிரம் கிலோகிறேம் இறால், நண்டு வகைகள், மற்றும் பீட்றூட், கரட் உட்பட பெருந்தொகையான மரக்கறி வகைகளும் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் ஏற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தின் பிரதான உற்பத்தியான பழ வகைகள், புகையிலை மற்றம் பனை உற்பத்திப் பொருட்களை உடனடியாகச் சேகரிக்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போது அவற்றையும் தென் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
palli
அனுப்பிய பொருளை விட இது அரசுக்கு ஆதாயம் என சொன்னால் யாராவது நம்ப வேண்டுமே.