இலங் கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்புச் செயலாளர் டொக்டர் லியம் பொக்ஸ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டனர்.நேற்று இலங்கைக்கு வருகை தந்த இவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நாளை நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.