இலங்கைக் கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பீட்டர் பேட்டன் தலைமையிலான குழு ஒன்று நேற்றயதினம் (12.03.2009) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு சென்ற இக்குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.