கொழும்பு வவுனியா யாழ்தேவி கடுகதி ரயில் சேவை நேற்று வியாழக்கிழமை முதல் மதவாச்சி வரையே நடைபெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடபகுதி பயணிகள் மறுஅறிவித்தல்வரை மதவாச்சி சென்றே கொழும்புக்கான ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாததுடன் மீண்டும் வவுனியாவுக்கான சேவை எப்போது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படவில்லை. நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கான பகல்நேர ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இடையிடையே இந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மறுஅறிவித்தல் வரை இந்த ரயில்சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
பகீ
என்ன ரெயின் கோண்டாவில் போகுது கே.கே.எஸ் போகுது பொப்பாட்டு பாடலாம் நினைவுகள் மலரது எண்டெல்லாம் இருக்க…இப்ப என்னடா எண்டால் மதவாச்சியோட நிக்கப்போகுதாமெல்லோ!!!!
பட்டுவேட்டிக் கனவு…………. நினைவு வருகுது!