கடந்த இரு தினங்களுக்கு முன் திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுமியைப் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.
சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் ஒரு மில்லியன் ரூபாவை அவரது குடும்பத்தினரிடம் கப்பமாகக் கேட்டிருந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: புகைப்படம் lankadeepa.lk
சஜீர் அகமட் பி
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் யூட் றெஜி வர்சா என்ற மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
திருகோணமலை புதிய சோனகத் தெருவில் வடிகானுக்குள் உரப்பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.
திருகோணமலை நீதவான் எம்.மனாப் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனும் ஸ்தலத்திற்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
3 கோடி ரூபாய்கள் கப்பம் கோரி குழந்தையின் தாயாருக்கு கடத்தல்கார்கள் மிரட்டல் விடுத்தனர். பொலிஸாரிடம் சென்றால் குழந்தை கொல்லப்படுவாள் என எச்சரிக்கப்பட்டதுடன், தந்தையின் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களையும் கேட்டுள்ளனர். விடயத்தை அறிந்த பொலிஸார் இரகசியமாக தேடுதலில் ஈடுபட்டனர்.
இதே நேரம் இன்று காலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அங்கு வந்த வலயக் கல்வி பணிப்பாளர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அடையாளத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள், வகுப்புக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு காலை 10.30 மணியளவில் வகுப்புக்குத் திரும்பினர்.
கடத்தப்பட்ட பெண்குழந்தை கண்கள், வாய், கைகள் கால்கள் என்பன சலோட்டேப் இனால் ஒட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் போடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
கொல்லப்பட்டவரின் தந்தை டோஹா, கட்டார் என்னும் இடத்தில் சாரதியாகப் பணியாற்றுகின்றார்.
தாயார் திருமதி யூட் ரெஜி புஸ்பராணி பொலிஸாருக்கும் நீதவானுக்கும் வாக்குமூலம் அளித்தார்.
rajai
please police! catch these culprits & killers very soon, and ……………………