கொழும்பு வோட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார்.
சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.