மகா நாயக்க தேரர்களுடன் ஆனந்த சங்கரி சந்திப்பு – புத்தரின் புனித தந்தத்திற்கும் தரிசனம்

anada_sangari.jpgதமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தற்போது பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித தந்தத்தை நேற்று (13) காலை தரிசித்ததுடன் கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்த அதி வணக்கத்திற்குரிய மகா தேரர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது அனைத்து வகையிலும் தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் பறிகொடுத்து தொடர்ச்சியான தோல்விகளை அனுபவித்து வரும் பயங்கரவாத புலிகளின் தலைவர் பிரபாகரன் மத வழிபாட்டுத் தலங்களையும் அதில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும் இலக்கு வைத்து மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச அரங்கில் இதனை தெளிவுபடுத்த வேண்டியது எமது அனைவருடைய பொறுப்பாகவுமாக உள்ளது.

தன் வசம் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் பொது மக்களை உடன் அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும்படியும் மேலும் அது போன்று பயங்கரவாத குழுத் தலைவர் பிரபாகரனையும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட வேண்டுமெனவும் நான் பகிரங் கமாக தெரிவிக்கின்றேன் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக் குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித்தக்கியை சந்தித்துப் பேசும் போது ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • Kullan
  Kullan

  பல்லுக்கழண்ட சங்கரிக்கு பல்லுத்தேவைப்படுகிறது. புத்தனின் பல்லுத்தானா கிடைத்தது சங்கரியின் வாய்க்கு

  Reply
 • thushiyanthan
  thushiyanthan

  ஆம் ஆம் ஆனந்தசங்கரி சொல்வது போல் எல்லோரும் சர்வதேச சமூகத்திடம் எடுத்துக்கூறவேண்டும் எண்றுநினைத்தால் ஆனந்த்தசங்கரிக்கு கோபம் வந்திடும், அப்படித்தான் டக்ளஸுடன் தென்னாபிரிக்கா வரை இலங்கை அரசாங்கத்தின் பிரதினிதியாக பயணம் செய்து டக்ளஸுடன் பல புகைப்படங்க|ளுக்கும் போஸ் கொடுத்து விட்டு இப்ப டளஸுக்கு என்ன போடு போடுகிறார் இவர் என்பது பலருக்கும் தெரியும்.
  எல்லம் மிக விரைவில் வர இருக்கும் பொதுத்தேர்தலையொட்டிய நாடகங்கள் தான் . ஆடத்தெரிந்த்தவர்கள் ஆடித்தானே காட்ட ஆசைப்படுவார்கள்

  Reply
 • palli
  palli

  சங்கரியரே தெரியதனமாய் சில வாரத்துக்கு முன் பல்லி பாராட்டு தெரிவித்து விட்டது. இதெல்லாம் ஒரு பிழைப்பா? சத்தியமாக பல்லி சொல்லுகிறது உங்களுக்கும் தமிழர் பிரச்சனைக்கும் வெகு தூரம். தயவு செய்து தாங்கள் திரும்பவும் அண்ணானகர் ரீ கடை வாசலுக்கு போகவும். அங்கு உங்களை எதிர்பார்த்த வண்ணமே கிருஸ்னராசா இருக்கிறார். தம்பி ஜயாவுக்கு ஒரு ரீ இரண்டு வடை………. தமிழரால் மன்னிக்க முடியாத சிலரில் ஜயாவும் ஒருவர்.

  Reply
 • thushiyanthan
  thushiyanthan

  பல்லி உமக்கு சில விடயங்கள் தெரியாதுபோல. கிருஸ்னராஜாவுடன் இருந்த நட்பை சங்கரி உதறித்தள்ளி கன காலம் பாவம் கிருஸ்னராஜா இந்த ஆளை நம்பி ஒருவரும் ரீயோ வடை வாங்க முன்வரப்போவதில்லை, பரந்தன் ராஜனை எப்படிக் கழட்டி விட்டாரோ அப்படித்தான் கிருஸ்னராஜாவுக்கும் நடந்தேறியது. சங்கரி தனக்கு தேவைப்படும் போது ஆதளை பயன்படுத்துவதும் தேவை முடிந்ததும் கழட்டி விடுவதும் ஒன்றும் புதினமான விடயமல்ல. ஆனாலும் பல்லி நீர் சொன்னது போல சங்கரி அண்ணா நகருக்குத்தான் போவார் அங்கு கிருஸ்னராஜா இருக்க மாட்டார் ஆனாலும் ஐயர் வீட்டு வாசல் திறந்திருக்கும் என்று சங்கரிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இலங்கை அரசாங்கம் சொல்வதுபோல மீண்டும் யாழ் தேவி கொழும்பில் இருந்து குறைந்தபட்சம் கிளினொச்சி வரை போகுமானால் சங்கரி அண்ணாநகர் போக மாட்டார். யாழ் தேவியில் தான் காலம் களிப்பார். அவருக்குப் பழக்கப்பட்ட விடயம் அல்லவா

  Reply
 • santhanam
  santhanam

  இலங்கையின் உயர் சமயபீடாதிபதிகளை சந்திப்பதில் என்ன தப்பு விருமாண்டியை விட இவர்தமிழரிற்கு உடலால் வருத்தவில்லை அவர் விடும் அறிக்கை அனைத்தும் யதார்த்தம். இன்னும் சிலவாரத்தில் முக்கிய நிகழ்வுகள் இலங்கையில் அரங்கேறும்

  Reply