தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது : மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

karpal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட  முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.
 
பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • suppu
    suppu

    ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் அப்பிடித்தானே பேசவேண்டும்.

    Reply
  • msri
    msri

    ஐயா! உங்களைப்போலை ஆட்கள் உப்பிடிப் பேசி >எங்களைப் ப்ப்பா மரத்திலை ஏத்தி>உள்ளதும் இல்லாமல் போய்விட்டது!

    Reply
  • Kullan
    Kullan

    ஏதோ பிரபாகரனுடன் இரந்தவர் மாதிரிக்கதைக்கிறார். பிரபாகரனுக்கே தன்னைத்தான் யாரென்று தெரியாமல் நிற்கிறார். ஆமிக்காம் 4 அடித்தால் தமிழ்ஈழம் வந்து விடும் என்று நம்பும் புலிகளின் புனிதப்போர். மக்கள் மயமாக்கப்படா 30வருடத்துக்கு மேற்பட்ட போராட்டம் என்பதை ஏன் எவராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    Reply
  • Kusumpan
    Kusumpan

    மலேசியாவிலை இருக்கிறவருக்கு விளங்கின அளவு ராசபக்சவுக்கோ கருணாநிதிக்கோ மனமோகன் சிங்குவுக்கோ ஏன் இந்தியாவுக்கோ புரியாமல் போனது. உலகறிந்து தலைவன் எங்கள் தலைவன் பிரபாகரன். தானைத்தலைவன் தலைமையில் நாம் தொடர்ந்து போராடுவோம்! வாழ்க தமிழ் ஈழம்

    Reply
  • BC
    BC

    மலேசியாவிலை இருக்கிற கர்ப்பால் சிங்குக்கு எப்படி விளங்கும்! தலைவன் பிரபாகரனால் 30 வருடமாக துன்பம் அனுபவிப்பது இலங்கை தமிழர்தானே. அதுவும் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தான் கர்ப்பால் சிங் இவ்வாறு கூறியுள்ளார் என்பது முக்கியமாக கவனிக்க பட வேண்டியது.

    Reply
  • palli
    palli

    இந்த கிள்ளி கொடுப்பா. அல்லது அள்ளி கொடுப்பா?? யாருக்கு??
    புலிகளுக்கா?? அல்லது தமிழ் மக்களுக்கா??
    மக்களுக்காயின் கிள்ளி கொடுதாலே போதும். ஆனால் புலிகளுக்காயின் அள்ளி கொடுத்தாலும் போதாது. விபரம் பல்லியா சொல்ல வேண்டும்?.

    Reply
  • Suppu
    Suppu

    பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும்…//

    பிடல் காஸ்ட்ரோ பிணம் தின்னி அல்லவே.

    Reply