நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்குச் சென்ற கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேநேரம் இந்திய ஊடகம் ஒன்றில் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தன “கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கோட்டபாய மீண்டும் நாடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார். எனினும் இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ‘கோட்டாபய ராஜபக்ச இன்னும் இலங்கையில் தான் இருக்கின்றார் எனவும் மேலும், தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியதாகவும் அவர் இன்னும் இலங்கையில் தான் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிரிவரும் 13ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.