நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து மின்வெட்டு அபாயம் தணிந்துள்ளதாக மின்சார சபை நேற்று தெரிவித்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்த வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீரேந்து பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் மின்சார சபை கூறியது. இதன் காரணமாக மின்வெட்டு அபாயம் பெருமளவு தணிந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இதேவேளை இடியுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வடக்கு, கிழக்கு நீரேந்து பகுதிகள் மட்டுமன்றி நாட்டின் சகல பாகங்களிலும் மழை வீழ்ச்சியை எதிர்பார் ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. மழைக்கு முன்பாக கடும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் அவதான நிலையம் தெரிவித்தது. இம்மாத இறுதிவரை மழை வீழ்ச்சி தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.