இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக சுமார் 15 இலட்சம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் M.D. போல் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் சிமெந்தின் விலை மற்றும் கட்டுமாணத் தேவைகளுக்கான கல்,மண், மற்றும் கம்பிகளின் விலையேற்றம் காரணமாக எவரும் புதிதாக கட்டுமாணப்பணிகளை ஆரம்பிக்காததுடன் ஏற்கனவே தொடங்கப்பட்ட வேலைகளும் விலையேற்றம் காரணமாக பாதி வழியிலேயே நிற்கின்றது.
அத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் யாவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தடைப்பட்டு போயுள்ளது. இதனால் கட்டுமாண தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தொழில் இன்மை ஏற்பட்டுள்ளது. இதுவே இவ்வளவு பாரிய ஊழியர் படை வேலை இழக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.