எழுத்து மூலமான உறுதிப்படுத்தலை பெற்ற பின்னரே டலசுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம் – கூட்டமைப்பு விளக்கம் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட சஜித் அணியினர் கூட்டமைப்பிடம் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருமித்த ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெரும வெற்றிபெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை ,காணி அபகரிப்பு, மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் காணி அபகரிப்பு , உடனடியாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

எனினும் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சஜித் அணியினர் எழுத்து மூலம் வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளனர்.

……

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகோர்த்து நிற்கக்கூடிய டலஸ் அழகப்பெரும தீவிர இனவாத கும்பலான ராஜபக்சர்களின் மொட்டு பாசறையில் இருந்து வந்தவரே. அதே நேரம் ; கடந்த காலங்களில் தீவிர இனவாதம் பேசியிருந்த விமல் வீரவங்ச தரப்பினரே டலஸ் அழகப்பெருமவை ஊக்குவிக்கின்றனர். இவர்களுடனேயே இன்று கூட்டமைப்பு கைகோர்த்துள்ளது என்பதே கவலையான விடயம்.

எழுத்து மூலமாக கூறிய தீர்வுகள் சரி கிடைக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். அவ்வளவு காத்திரமாக எழுதப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தமே செயலிழந்து போன வரலாறுகளும் இலங்கையில் உண்டு என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *