பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் முன்மொழிந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழு மொட்டு கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜனபெரமுன கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தமை தொடர்பில் பல விவாதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் ரணில் தெரிவு தொடர்பில் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழு அதிருப்தியை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் சரிதா ஹேரத் மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா உட்பட 16 பேர் பொதுஜன முன்னணியில் இருந்து விலகி எதிரணியில் சுயாதீன குழுவாக அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.