முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வர விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அவர் வந்தால் பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்நாட்டின் குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு, முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர்ந்து செயற்பட விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.