வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் தனது கொள்கை உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இளைஞர்களின் ஆதரவோடு இணைந்து செயல்படவுள்ளேன். அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.