ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் வரலாற்றில் இருந்ததையே மீண்டும் இந்த உரையில் முன்வைத்துள்ளது. அத்துடன் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.