வவுனியா வீரப்புறம் சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் மற்றைய நபரின் காதை கடித்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று 04 இரவு 7.30 மணியளவில் இரு தரப்பினருக்குமிடையே வாய்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை பின்னர் காது கடியில் நிறைவடைந்தது.
குறித்த பிரச்சினையின்போது ஒரு இளைஞர் மோதலில் ஈடுபட்ட மற்றைய நபரின் காதை கடித்து துண்டாக்கியுளார். மற்றைய நபரின் தலையில் வாள்வெட்டு காயத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.