இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிதி நிபந்தனையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கும் போது அந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நிபந்தனையை விதிக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.