2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிப்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை ஆட்கடத்தல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எதிரி கைது செய்யப்பட்டுவவுனியா மேல் நீதிமன்றில் எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது எதிரி தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சிறுமி சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட எதிரிக்கு ஆட்கடத்தல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், துஸ்பிரயோக குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், 5 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடும், செலுத்த தவறும் பட்சத்தில் இரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.