இன,மத, சாதீய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நடந்த போராட்டம் நாட்டின் அரச தலைவரை மாற்றியது. அந்த போராட்டத்தில் நன்மையான பல விடயங்கள் இருந்தன.
21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தும் வகையில் இந்த நாட்டில் இன, மத, சாதீய பேதங்கள் இன்றி மக்கள் ஒன்றிணைந்திருந்தமை போராட்டத்தின் பிரதான அடையாளம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சி.
நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கி செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் இன,மத, சாதிய வாதங்களுடன் முன்நோக்கி செல்ல முடியாது. இன,மத, சாதி வேறுபாடுகள் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டுமாயின் நாம் எமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குறைந்தது எமது நாட்டின் பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமரும் போது மன மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். எனவும் தெரிவித்தார்.
……………………..
உண்மையிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரனவினுடைய வார்த்தையானது மாற்றத்தை எதிர்பார்த்து இருக்குமாயின் பிரதமர் என்ற வார்த்தைக்கு மேலதிகமாக தமிழரோ – முஸ்லீமோ ஜனாதிபதியானால் என்ற வார்த்தையையும் சேர்த்திருக்க முடியம். ஆனால் அவருடைய ஆதிக்க மனோநிலை அந்த வார்த்தையை சேர்க்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை. ஆளும் வர்க்கம் சாதாரணமாக கூட சிறுபான்மை மக்களை இணைத்து நாம் இலங்கையர் என்ற கோணத்தில் நகர்வோம் என்ற கருத்தை என்றைக்கு இலங்கையின் அரசியல்தலைவர்கள் நினைக்கிறார்களோ அன்றைக்கே நாட்டின் நிலை மாறும்.
Mohamed SR Nisthar
Late but good suggestion. Before it gets too late do favourable thing towards this.
BC
லேட்ராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு பிறந்த ஞானோதயம் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது என்பதற்கு பதிலாக நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமரும் போது என்று வரவில்லையே.