சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் .
சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைய இருக்கிறது.
இலங்கை துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் இத்து இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என அவர் கூறியுள்ளார் .
இதேவேளை இலங்கை வரும் சீனக்கப்பல் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர , “கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர