ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.