‘தமிழ் மக்களை கொன்றொழிப்பதை நிறுத்து!’ இன்று மாலை லண்டன் கொன்வே ஹோலில் கூட்டம் : Committe for a Workers International

cwi_grey.gifவட இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதைக் கண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்வுகள் கொந்தளித்த நிலையில் உள்ளனர். இன்னமும் 200000 வரையான மக்கள் யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு ஒத்துழைக்க ராஜபக்ச அரசாங்கம் மறுக்கின்றது. 3000 பேர்வரை இந்த ஆண்டின் கடந்த சில வாரங்களில் கொல்லப்பட்டு உள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்களைக் கொன்றொழிப்பதை நிறுத்துவதற்கான போராட்டமும் ஜனநாயகத்திற்கும் தொழிற்சங்க உரிமைக்களுக்குமான போராட்டம் சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 15 குழுக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். இங்கு கோரிக்கைகளின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. சர்வதேச இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மார்ச் 30ல் பெரும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 8 சர்வதேச போராட்ட நாளாக தீர்மானிக்கப்பட்டு இந்திய அரசுக்கு எதிராகவும் கொலைகார ராஜபக்ச அரசுக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்தை லண்டனில் ஆரம்பித்து வைக்கின்ற கூட்டம் மார்ச் 21ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  விபரம் கீழே:

Saturday 21st March

at Conway hall, London at 6pm.

Nearest Tube Holborn

For more information please contact

Contact:
Senan : 07908050217
senann@hotmail.com.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • thaya
    thaya

    “Committe for a Workers International”

    “The final demise of the peace process is also damning indictment of its foremost advocates in Colombo—the middle class radical outfits, the Nava Sama Samaja Party (NSSP) and the United Socialist Party (USP). These socialist pretenders, acting in concert with small industry of “peace” NGOs and think tanks, have made a career out duping workers and young people into believing that the only way to end the war was to rely on one or other faction of the Sri Lankan bourgeoisie and the good services of the major international powers. Even as their latest ally—the right-wing UNP—joins in the chorus of Rajapakse’s victory celebrations, the NSSP and USP continue to plead for a resumption of imperialist-sponsored peace talks.

    It is time that workers drew the necessary conclusions. To mount a genuine antiwar struggle, the working class must rely on its own strength, mobilise independently of all factions of the bourgeoisie and base itself on a socialist program to abolish the root causes of war—the profit system itself. It is precisely such a perspective that has been elaborated and fought for by the Socialist Equality Party in Sri Lanka and more broadly in South Asia.”
    http://www.wsws.org/articles/2009/feb2009/sril-f09.shtml

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    இத்தனை வருடகாலமாக காலுக்குச் செருப்புக் கூட இல்லாமல் உடுத்துவதற்கு முழுமையான ஆடையில்லாது ஒரு நாளேனும் முழு வயிற்றுக்குச் சாப்பிட முடியாது கஷ்டத்திலும் துயரத்திலும் தினம் தினம் வாடுகின்ற தோட்டத்து மக்களைப்பற்றி சற்றுமே கவலைப்பட்டிராத இவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுகிறோம் என்பதை எவ்வாறு உலகு ஏற்றுக் கொள்ளும். இலங்கையரசு இனப் படுகொலை புரிவதோடு இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்கிறது என்றால் அன்று வடக்கிலும் கிழக்கிலும் ஆதி தொட்டு வாழ்ந்து வந்த முஸ்லிம் சோதரங்களை பதறப் பதற கதறக் கதற வெளியேற்றிய நிகழ்வை என்னவென்று கூறுவது?

    பாதுகாப்பு வலயங்கள் மீதும் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படும் வெடித்தாக்குதல்களை நிறுத்துமாறும் இது சர்வதேச யுத்த விதிகளுக்கு முரணானது எனவும் கூறுவது எந்தளவிற்கு சரியானது என்பதை உணர்கிறீர்களோ அந்தளவிற்கு மத ஸ்தலங்களிலும் அதனுடன் ஒன்றிப் பிணைந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளும் நிராயுதபாணிகளிடம் தமது வீரத்தைக் காண்பிப்பது எந்தளவிற்கு நியாயம்?
    தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க புறப்பட்ட எத்தனையோ இயக்கங்களையும் கல்விமான்களையும் ஏன் முதுபெரும் அரசியல் அறிஞர்களையும் மட்டுமன்றி ஏனைய இனத்திலிருந்தும் இவ்வாறான உயிர்களை பலி கொண்டதனை எந்த விதத்தில் நியாயப்படுத்தப் போகின்றீர்கள்? — அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply