தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் தேவையான இராஜதந்திர உதவி பெற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவதற்காக பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க மொட்டு கட்சியால் கோட்டா கம் ஹோம் சமூக ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.